Tuesday, May 11, 2010

சுறா படத்தின் SuPEr HiT கதை


இளைய தளபதி அன்புத் தளபதி இனிய தளபதி இதய தளபதி தனது குருவி படத்தின் மூலம் உலக படங்களை எல்லாம் ஓட விட்டு எட்டி உதைத்து ஆஸ்கார் அவார்ட் வாங்கிய நடிப்பின் சிப்பி மேதகு டாக்டர் விஜய் அவர்கள் நடிப்பில்(இவருக்கும் நடிப்பிக்கும் சம்பந்தம் இல்லை)உருவாகிய , அவரது 50 வது படம் சுறா.

ஐந்து பாடல்களுக்கு நடனம் ஆடுவதற்கு மட்டும் படம் நடிக்கும் உன்னதமான நடிகர்களில் இவர் முதன்மையானவர் என்பது யாவரும் அறிந்ததே. இந்த படத்தில் இவர் முதன் முதலாக மீனவ கதாபத்திரத்தில் நடித்து இருக்கிறார். (எங்களுக்கு தெரியாத இவரது ஆஸ்கார் பெர்போர்மான்ஸ் எப்பிடி இருக்கும் என்று) இனி சுறா படத்தின் கதைக்கு வருவமா.

இவர் மீனவனாக நடிப்பதால் கண்டிப்பாக படத்தின் ஆரம்பத்தில் ஒரு படகு போட்டி இருக்கும்.ஒரு சாதாரண ஓட்டை படகை வைத்து கொண்டு போட்டிக்கு வருகின்ற எல்லா படகுகளையும் தண்ணீரில் பறந்து பறந்து ஓட ஓட விரட்டி பிடிப்பார்.பிறகு வெற்றி பெற்றவுடன் எல்லாரும் இவரை தூக்கி கொள்ளுவார்கள் அதில இவரது அறிமுக பாடல் ஆரம்பிக்கும் ( இதை சொல்லிய தெரிய வேணும் இதைத்தானே இவர் எல்லா படத்திலும் செய்கிறார்)


படகு போட்டி இல் இவர் வென்றவர்களில் படத்தின் வில்லன்களில் ஒருவரின் தம்பி இருப்பார்.(கதை போய்கொண்டு இருக்கு நாங்க எதிர் பார்க்கிறதை காணவில்லை வேற என்னவிஜய் அவர்களின் பஞ்சு டயலாக் தான்) பிறகு இவரும் இவரது நண்பர்களும் கடக் கரையில் இருந்து மொக்கை போட்டு கொண்டு இருப்பார்கள். அப்போது ஒரு வில்லன் ஒருவரை துரத்தி கொண்டு வந்து இவர் கண் முன்னே அரிவாளால் வெட்டி கொல்லுவார் .இவர் அதை பார்த்தும் பேசாமல் இருந்து விடுவார் .பிறகு அதே வில்லன் இவரது இடத்திக்கு வந்து ஒரு பெண்ணை மானவங்க படுத்த முற்படும் போது திடீரென வில்லன் முப்பது அடி தூரம் விழுந்து கிடப்பார்.(வேற என்ன விஜய் அவர்களில் கை பலம் தான் ).பிறகு விஜய் அவர்கள் எல்லாரையும் பறந்து பறந்து விரட்டி அடிப்பார் .(படத்தின் ஹீரோ இவர் தானே இவர் தானே செய்ய வேண்டும்) பிறகு பஞ்சு டயலாக் -. உன் வலையில் விழுவதற்கு புறா அல்ல நான் .சுறா சுறா ... பேசுவார்(கத்துவார் ) பாருங்கோ ஐயோ அம்மா தாங்க முடியாது.

படத்தில் கண்டிப்பாக தமன்னா பணக்கார பெண்ணாகவும் ஆங்கிலம் தெரிந்த பெண்ணாகவும் திமிர் பிடித்த பெண்ணாகவும் நடித்து இருப்பார் .கண்டிப்பாக இவருக்கும் தமன்னாவுக்கும் சண்டை வரும்.இவர் பிறகு இவர் தமன்னாவின் திமிரை அடக்குவார் .பிறகு ஒரு நாள் தமன்னாவை வேற ஒரு வில்லன்கள் கலைக்கிறது போல ஒரு காட்சி வரும் அதில இவர் மறுபடியும் பறந்து பறந்து அடித்து தமன்னாவை காப்பாத்துவார்.பிறகு தமன்னா காரில் செல்லும் போது இவர் கஷ்டப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறது போல ஒரு சீன் வரும்( பல ஆண்டு காலமா இதை தானே செயுறாங்க) தமனாவுக்கு இவர் மேல காதல் வந்து விடும்.பிறகு இவரும் கதைப்பார். பிறகு பாண்டிசேரி ல இருந்து சுவிஸ் க்கு டுயெட் பாடி விட்டு வருவாங்க.(வழமையாக நடக்கிறது தானே )

பிறகு தான் தெரிய வரும் தமனாவின் அப்பா ஒரு பிரபல தாதா என்று. அவர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு காட்டுவார் (இதை தானே எல்லா தமிழ் படத்திலும் காட்டுறாங்க) பிறகு இவர் அவர்களுடன் சூப்பர் மானாய் விட பறந்து பறந்து சாகசங்களை காட்டி அடிபடுவார் .பிறகு கதைக்கு சம்பந்தமே இல்லாத பல வில்லன்கள் வந்து போவர்கள்.அவர்களையும் துவைத்து எடுப்பார் .பிறகு மக்களுக்கு அநீதி செய்கின்ற அரசியல் வாதி ஒருவருடன் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பார் .(ஹீரோ வேஷம் என்றால் சும்மாவா) பிறகு மக்கள் ஆதரவு இவருக்கு இருக்கும். இவர் மக்களுக்கு உதவிகள் பல செய்கிறது போல சீன் வரும் .இவர் உடனே அரசியலில் குதித்து விடுவார் (இவரிட எதிர் கால திட்டமே அதுதானே . விஜய் அரசியலுக்கு வரலாம் இவரின் சினிமா தொல்லை கொறையும் ) இவர் ஒரு ஐந்து நிமிட பாடலில் தேர்தலில் வென்று அமைச்சர் ஆகிடுவார்.(இவர் ட நடிப்பு திறமைக்கு அமெரிக்காவுக்கு கூட ஜனாதிபதி ஆகலாம் )

இருந்து விட்டு அப்ப அப்ப இவரும் தமனாவும் செய்கின்ற மொக்கை கட்சிகளை கட்டுவாங்க(படத்தில சாங் இருக்கு மறந்திட வேண்டாம் எண்டு காட்டுறதுக்கு தான் ) படத்தின் கடைசி இல் கதைக்கு பொருத்தம் இல்லாத ஒரு செண்டிமெண்ட் அதில இவரின் அம்மா இல்லது அப்பா சம்மந்த பட்டதாகவே சீன் வரும் அதில இவர் அழுகிறது போல விக்கி விக்கி சிரிப்பார்.(இது ஆஸ்கார் பெர்போர்மான்ஸ்) படத்தின் கடைசி கட்டத்தில் இவர் 1000 வில்லன்கள் வருவார்கள் பிறகு எல்லா வில்லன்களையும் அடித்து விட்டு பஞ்சு டயலாக் பேசுவார் .இதை பார்த்தவுடன் தமனாவின் அப்பாவே இவருக்கு சம்மதம் சொல்லுவார்.இது தான் சுறா படத்தின் கதை .


குறிப்பு . டாக்டர் விஜய் அவர்களின் ஆஸ்கார் பெர்போர்மான்ஸ் பார்க்க முடியாமல் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் சீக்கிரமே கிளம்பிடார் .சுறாவின் 100வது நாள் கொண்டாடத்தில் மீண்டும் சந்திப்போம்( வேற என்ன 30நாள் ஓடின வேட்டைக்காரன் படத்தை 40நாள் என்று போஸ்டர் அடித்து போட்டவர்கள் தானே)

No comments:

Post a Comment